MrAndMrs சின்னத்திரையில் இருந்து இந்த வாரம் வெளியேறிய ஜோடி யார் தெரியுமா ?

By ·

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது.

இதில் குக்கு வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும், யோகேஷ் - நந்தினி, மணிகண்டன் - சோபியா, வேல்முருகன் - காலா, யுவராஜ் - காயத்ரி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த 12 போட்டியாளர்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மணிகண்டன் - சோபியா தாங்களாகவே வெளியேறி இருந்தனர். கடந்த சீசனில் கூட இதே போல ரம்யா - சத்யா ஜோடி வெளியேறி இருந்தனர். இந்த சீசனில் இருந்து வெளியேறிய காரணம் குறித்து பேசிய சோபியா உடல் நல குறைவால் வெளியேறியதாக கூறி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று பலரும் எதிர் பார்த்து வந்தனர். இந்த வாரம் தீபா - ஷங்கர் ஜோடியும் ராஜ்மோகன் மற்றும் கவிதா ஜோடியும் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் ராஜ்மோகன் மற்றும் கவிதா தம்பதி இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full