Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 டைட்டில் வின்னர் இவர்கள் தான். பல லட்சத்தை தட்டிதூக்கிய ஜோடி

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி இருக்கும் நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து சமீபத்தில் தான் மூன்றாவது சீசன் தொடங்கியது. ஆரம்பத்தில் 12 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி இருந்தார்கள். பின் பல போட்டிகள், சவால்கள் உடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல் வாரவாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேறி தான் ஆக வேண்டும். அதற்கேற்ப டாப் 5 ஜோடியில் முதல் ஜோடியாக ஜாக் - ரோஷினி ஜோடி பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதனைத்தொடர்ந்து சரத் - கிருத்திகா, காயத்ரி- யுவராஜ், மைனா நந்தினி- யோகேஷ் ஆகிய இவர்கள் எல்லாம் நேரடியாக பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், இதற்கு பிறகு வைல்ட் கார்ட் போட்டி நடந்தது. இதில் வினோத் -ஐஸ்வர்யா மற்றும் ராஜ்மோகன் -கவிதா ஜோடிகள் பைனல் லிஸ்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். மொத்தம் ஆறு ஜோடிகளுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியின் பைனல் போட்டியில் அசத்திய சரத் - கிருத்திகா ஜோடி டைட்டில் வின்னர் ஆகியுள்ளனர். இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. யாருமே எதிர்பார்க்காத சரத்- கிருத்திகா ஜோடி தான் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்கள். இது பல பேருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. இவர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

சமீபத்தில் தான் சரத்-- கிருத்திகாவுக்கு திருமணம் நடந்தது. அதோடு இந்த சீசனில் இளம் தம்பதிகளாக திகழ்ந்தவர் சரத்-கிருத்திகா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல காமெடி நிகழ்ச்சிகளில் சரத் கலந்திருக்கிறார். அதேபோல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் டி ஆர் பி யில் முன்னிலையில் வகிக்கும் ராஜா ராணி 2 தொடரில் சரத் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full