நடிகர் தனுஷ் உடன் காதலா? உண்மையை போட்டுடைத்த நடிகை மிருணாள் தாக்கூர்

By subhashini · 10/8/2025

சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் இடையே காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் சில வதந்திகள். அதை விளம்பரத்திற்காகவே செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது தனுஷ்-மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக சில தினங்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மிருணாள் தாக்கூர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் வெளிவந்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதை அடுத்து இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது மிருணாள் நடித்த படம் சன் ஆப் சர்தார் 2. இந்த படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார். உடனே இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்றெல்லாம் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

மிருணாள்-தனுஷ் சர்ச்சை:

அதற்குப்பின் மிருணாள் பிறந்தநாள் விழாவிலேயுமே தனுஷ் கலந்திருந்தார். அதனை எடுத்து அடிக்கடி தனுஷ் அவர்கள் மிருணாள் உடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள், காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவ தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், தனுஷ் எனக்கு நல்ல நண்பர். சமீபத்தில் எங்கள் இருவரையும் பற்றி நிறைய வதந்திகள் பரவிருப்பது அது எனக்குமே தெரியும்.

https://www.youtube.com/watch?v=1od22sq1DOs

மிருணாள் பேட்டி:

அதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. சன் ஆப் சர்தார் 2 நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டது பற்றி தவறாக எடுத்துக் கொண்டார்கள். அவருக்கும் அஜய் தேவ்கானுக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. அஜய் தேவ்கான் தான் தனுஷை அந்த நிகழ்விற்கு அழைத்து இருந்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக எங்களை இப்படி இணைத்து பேசினார்கள். தேவையில்லாமல் எங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.

மிருணாள் விளக்கம்:

இதன் மூலம் தனுஷ்-மிருணாள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் தனுஷ் அவர்கள் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்திருந்தார். 18 வருடம் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full