அதற்காக அவர் செய்வார் என்று நினைக்கவில்லை - தனுஷ் பற்றி மிருணாள் தாகூர் ஓபன் டாக்

By subhashini · 21/2/2026

சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் இடையே காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் வதந்திகள். அதை விளம்பரத்திற்காகவே செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தனுஷ்-மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன் மிருணாள் படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார்.

உடனே இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப்பின் மிருணாள் பிறந்தநாள் விழாவிலேயுமே தனுஷ் கலந்திருந்தார். அதனை அடுத்து அடிக்கடி தனுஷ் அவர்கள் மிருணாள் உடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவ தொடங்கியது. பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், தனுஷ் எனக்கு நல்ல நண்பர். தேவையில்லாமல் எங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்றார்.

மிருணாள் குறித்த தகவல்:

இருந்தாலும், தனுஷ்-மிருணாள் பற்றிய வதந்திகள் சோசியல் மீடியாவில் ஓய்ந்தபாடில்லை. அதோடு கடந்த சில நாட்களாகவே தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது மிகப்பெரிய அளவில் விவாத பொருளாகவே மாறி இருக்கிறது. மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியை கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், பிப்ரவரி 14-ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதியாக மாறப் போகிறது. சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும் போது திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.

மிருணாள் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மிருணாளிடம் தனுஷ் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு மிருணாள், தனுஷ் சார் உடைய ராயன், மாரி, கேப்டன் மில்லர் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன். அசுரன் படத்தை பலமுறை கூட பார்ப்பேன். அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

தனுஷ் பற்றி சொன்னது:

அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். நான் அவரை 'Tere Ishk Mein' படப்பிடிப்பில் சந்தித்தேன். அப்போது நான் தயங்கியபடி தனுஷ் சாரிடம்,Son of Sardaar படத்தின் திரையிடலில் கலந்து கொள்ள முடியுமா? என்று கேட்டேன். அவர் வருவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அவர் ரொம்ப தன்மையானவர். அவருடன் என்றாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full