அவர் அவமானபடுத்தியதை இன்னும் மறக்கள - எம் எம் பாஸ்கர் பகிர்ந்த சீக்ரெட். வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். எம் எஸ் பாஸ்கர் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினத்தில் தான். இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு தான் எம்எஸ் பாஸ்கர் அவர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலாக திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இவர் தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான அழகி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, கங்கா யமுனா சரஸ்வதி, செல்வி போன்ற சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சினிமாவில் முதன் முதலில் கடந்த 1987 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
https://www.facebook.com/VijayTelevision/videos/1388768907869002
அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இன்று ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு ,முன்னர் நீ நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற எம் ஸ் பாஸ்கர், வாய்ப்பு கேட்டு சென்ற போது தயாரிப்பாளர் ஒருவரால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியுள்ளார்.