நான் வீடு கட்டும் போது ரொம்ப கஷ்டம், அப்போ ஏ எல் விஜய் சொன்னது - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எமோஷனல்

By subhashini · 2/3/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காதல் ரிசெட் ரிப்பீட். புதுமுக நடிகர்களை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் எம் எஸ் பாஸ்கர், எப்போதுமே தம்பி ஏ எல் விஜய் எனக்கு பெயர் வாங்கி தரக்கூடிய கதாபாத்திரத்தை தான் தருவார். அவர், தான் செய்யக்கூடிய வேலையை ரொம்ப ரசித்து, எந்த ஒரு கர்வமும் இல்லாமல் செய்பவர். இந்த படம் என்னுடைய வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத படம்.

காதல் ரிசெட் ரிப்பீட் படம்:

நான் வீடு கட்டிருக்கும்போது பண பற்றாக்குறையாக இருந்தது. அந்த சமயத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு சொல்லி இருந்தார்கள். ஆனால், கமிட் ஆகாமல் இருந்தேன். எந்தவித ஒரு தடையும் இல்லாமல் பேசி அந்த சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கை உடனே எனக்கு அவருடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்து, வீட்டை கட்டுங்க அண்ணா, அப்புறம் பார்த்துக்கலாம் என்று ஏ எல் விஜய் சொன்னார். அவர் எனக்கு ஆதரவளித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=ppdaZQrixX4

எம் எஸ் பாஸ்கர் பேசியது:

நாங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் தான் பிறக்கவில்லை. ஆனால், நான் தம்பி என்று தான் பாசமாக அழைப்பேன். அவர் என்னை அண்ணன் என்று ரொம்ப பாசமாக அழைப்பார். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

ஏ எல் விஜய் பற்றி சொன்னது:

இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு தான் எம்.எஸ் பாஸ்கர் அவர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலாக திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தான் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இவர் தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full