மனைவியின் மிரட்டல் - தற்கொலைக்கு செய்து கொண்ட தோனி பட நடிகர். தற்கொலைக்கு முன் வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 16/2/2021

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே புரட்டி போட்ட விஷயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணம் தான். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். நடிகர் சுஷாந்த் அவர்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் பதித்தார். பின் ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில காலங்கள் மன அழுத்தத்தில் இருந்து வந்து உள்ளார். பிறகு மருத்துவ ஆலோசனைகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் இறப்பு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் பாருங்க : கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - என்னாத்த, அவரும் சொல்லி சொல்லி பார்க்கிறாரு. அஜித் ரசிகர்களை கேலி செய்த பிக் பாஸ் 3 நடிகை.

இவர் தற்கொலை குறித்து பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இவரின் தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் என்று கூறப்பட்டது. மேலும், இவர் தற்கொலைகான காரணமே இன்னும் மர்மமாக இருக்கும் நிலையில் சுஷாந்த் நடித்த தோணி படத்தில் அவரது நண்பர் கதாபாத்திரத்தில் நடித்த சந்தீப் நஹர் தற்கொலை கொண்ட சமத்துவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மும்பை கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சந்தீப் நஹர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

https://twitter.com/vikasyadav1192/status/1361376984580853764

தற்கொலைக்கு முன்னதாக சந்தீப் நஹர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசினார். ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full