-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

தயாரிப்பாளருக்கு விருப்பம் இல்லை, அடம்பிடித்த எம்.எஸ்.விஸ்வநாதன்- தேசிய விருது கிடைத்த பாடல் உருவான கதை

0
46

எம்.எஸ்.விஸ்வநாதனின் பிடிவாதத்தால் நடிகை சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் புகழ் பெற்று விளங்கியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் 1,700 பாடல்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், இவர் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே இசைத்துறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இழப்பு தமிழ் திரை உலகுக்கு பேரிழப்பு தான். இப்படி இருக்கும் நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதன் பிடிவாதத்தால் பாடகி பி.சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உயர்ந்த மனிதன் படம்:

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1968-ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் ‘உயர்ந்த மனிதன்’. இந்த படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, அசோகன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் சிவகுமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சிவகுமார், சிவாஜி உடன் சேர்ந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்.

எம்எஸ்வி-சுசீலா பாடல்:

-விளம்பரம்-

மேலும், வாலி தான் இந்த படத்தினுடைய அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படத்தினுடைய பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடி இருந்தார்கள். ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா’ என்ற பாடலை பி.சுசிலா பாடியிருந்தார். இதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

தேசிய விருது பெற்ற சுசீலா:

அதுமட்டுமில்லாமல் தேசிய விருது பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை சுசிலாவுக்கு தான் சேரும். இந்த பாடல் காட்சி எடுப்பதற்கு முன்பு ஊட்டியில் படக்குழுவினர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது இந்த பாடலை படமாக்க சூழ்நிலை ஏற்படவில்லை. இதனால் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப் செட்டியார் இந்த பாடல் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இந்த பாடல் இல்லாமலே படத்தை வெளியிடலாம் என்றெல்லாம் சொல்லி இருந்தார்.

பாடல் வெளியாக காரணம்:

இதை எம்.எஸ்.வி, இயக்குனர் கிருஷ்ணர் பஞ்சு ஒத்து கொள்ளவில்லை. அதோடு இவர்கள் இந்த பாடலை கண்டிப்பாக படமாக வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கு பிறகு தான் தயாரிப்பாளர் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் செட் அமைத்து காட்சி எடுத்திருந்தார். கடைசியில் அந்த பாடலுக்கு தான் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news