எரிச்சலேற்றிய அபிராமி.! இரண்டே குத்தில் கட்டிலை உடைத்த முகென்.!

By ·

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

https://twitter.com/vijaytelevision/status/1158263868004560896

இன்றைய முதல் பிரமோவில் முகென், சாக்க்ஷி, அபிராமி ஷெரின் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அபிராமியிடம், சாக்க்ஷி 'நான்முகனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா' என்று கேட்டகிறார். இதனால் கடுப்பான அபிராமி எப்போதும் நீ உன்னை பற்றி மட்டும்தான் பேசுவாயா என்று அந்த இடத்தை விற்று கோபமாக சென்று விடுகிறார்.

அதன் பின்னர் லாஸ்லியாவிடம் அழுது புலம்பும் அபிராமி, எப்போதும் சாக்ஷிக்கு அவருடைய பிரச்சனை தான் முக்கியமா மற்றவர்களுக்கு மனசு என்பதே கிடையாதா. அதிலும் நான் அங்கிருந்து எழுந்து வரும்போது முகென் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார் அது தான் எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கிறது என்று புலம்பினார்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், முகென் அபிராமியை சமாதானம் செய்ய முற்படும்போது அபிராமி எப்போதும் போல சீன் போட்டதால் கோபமடைந்த முகேஷ் கட்டிலை தன் கையால் ஓங்கி அடித்து அதனை உடைத்து தாக்கியுள்ளார். இதனால் அபிராமி தேம்பி தேம்பி அழுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full