ராமாயணத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம், நடிக்க வேறு யாரும் கிடைக்கலையா? ஆதிபுருஷ் படத்தை விளாசிய சக்திமான்.

By subhashini · 22/6/2023

ஆதிபுரூஸ் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகனை சக்திமான் முகேஷ் கண்ணா விமர்சித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் பான் இந்திய ஸ்டாராக மாறினார். தற்போது மீண்டும் பாண் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல ராமாயணம் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தழுவி எடுக்கவில்லை.

ஆதிபுருஷ் படம்:

இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆதிபுருஷ் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இப்படத்தை ஓம் ராவத் இயக்க தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரித்து இருக்கிறார். மேலும், ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமன் தன்னுடைய ராஜ்யமான அயோத்தியில் கிடையாது. 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்கிறார்.

படத்தின் கதை:

அப்போது அவருடன் பயணித்த அவரது மனைவி சீதை ராவணனால் நாடு கடத்தப்படுக்கிறார். பின் ராவணனை ஹனுமான் போன்றவர்களின் உதவியுடன் எப்படி வீழ்த்தி சீதையை காப்பாற்றினார் என்பது தான் மீதி கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தினுடைய கிராபிக்ஸ் எல்லாம் மோசமாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்திருக்கின்றனர்.

நடிகர் முகேஷ் கண்ணா பதிவிட்ட வீடியோ:

இருந்தாலும், இந்த படம் நான்கு நாட்களில் உலக அளவில் 375 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த சைப் அலி கானை விமர்சித்து வெளியாகியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆதிபுரூஸ் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சைப் அலிகான். இவருடைய நடிப்பு குறித்து 90ஸ் ஃபேவரட் சீரியல் சக்திமான் ஹீரோ முகேஷ் கண்ணா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ராவணனாக நடிக்க வேறு ஆட்களை கிடைக்கவில்லையா? ராவணன் பயங்கரமான ஆளாக இருக்கலாம்.

இராவணன் குறித்து சொன்னது:

ஆனால், அவர் ஒரு பண்டிட். ராவணனை ஒருவரால் எப்படி இப்படி கற்பனை செய்ய முடியும்? படம் அறிவித்த போது அந்த கதாபாத்திரத்தை நகைச்சுவையாக மாற்றுவேன் என்று சைப் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் காவியத்தின் கதாபாத்திரங்களை மாற்ற நீ யார்? உண்மையில் ராவணனை நகைச்சுவையாக காட்டத் தயாரிப்பாளர்கள் முயன்று இருக்கிறார்கள். ராவணனாக நடிக்க சிறந்த நடிகரை கண்டுபிடிக்க முடியவில்லையா? இது இராவணனை போல் இல்லை. ஒரு மலிவான கடத்தல்காரனை போல இருக்கிறது என்று கோபமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full