ஹாஸ்பிடலில் அனுமதித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், என்ன ஆச்சு? அவர் மகனே வெளியிட்ட பதிவு - என்ன தெரியுமா?
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் அமீன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஏ.ஆர் ரகுமான் குறித்த செய்தி தான்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இன்று காலையில் இருந்தே ஏ.ஆர் ரகுமானின் உடல்நிலை குறித்து செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சிலர், ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சுவலி வந்தது என்றும் அவருடைய உடலில் வேறு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ உண்மை வெளியாகவில்லை. அதோடு மருத்துவமனையில் இருந்தும் எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.
ஏ.ஆர் ரகுமான் உடல்நிலை:
இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன் போட்டு இருக்கும் பதிவில், அன்புள்ள ஃபேன்கள், குடும்பத்தினர், நல விரும்பிகள், உங்கள் அனைவரின் அன்பு பிரார்த்தனை ஆதரவிற்கு ரொம்ப நன்றி. அப்பா, Dehydration காரணமாக சற்று பலவீனமாக உணர்ந்தார். அதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் தான் செய்தோம். இப்போது அவர் நலமாக இருக்கிறார். உங்களுடைய வார்த்தைகளும் பிராத்தனைகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
ஏ.ஆர் ரகுமான் மகன் பதிவு:
உங்களுடைய தொடர் ஆதரவுக்கு நன்றிகளும் அன்புகளும் என்று கூறியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து நான் மருத்துவரை தொடர்பு கொண்டு விசாரித்தேன். அதில், ஏ.ஆர் ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் சொன்னார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் திரைப்பயணம்:
உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். இவருடைய இசைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்:
மேலும், இவர் தன்னுடைய இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமையை சேர்த்தவர். தற்போது இவர் ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.