'இசை வள்ளல்' டைட்டில் கொஞ்சம் ஓவர் தான் ஆனால் - பட விழாவில் டி.இமான் பளீச் பதில்
தனக்கு கொடுத்த பட்டம் தொடர்பாக இசையமைப்பாளர் இமான் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பேபி & பேபி. இந்த படத்தில் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். பிப்ரவரி 14-ஆம் தேதி தான் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் கலந்து இருந்தார்கள். அப்போது படத்தின் இசையமைப்பாளர் இமான், இந்த படத்தில் எனக்கு 'இசைவள்ளல்' என்ற டைட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. இது தயாரிப்பாளரோட அன்பால் நடந்தது. அதனால் இதை சீரியஸாக எடுத்துக்க வேண்டாம். பேபி & பேபி படம் தொடங்கும்போது என்ன மாதிரியான வேகம், பாசிட்டிவ் இருந்ததோ அதே படம் முழுக்க எடுத்தார்கள்.
பேபி பேபி படம்:
குடும்பத்தோடு பார்த்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற அளவுக்கு ஒரு அருமையான படம். ரொம்ப பிசியாக இருக்கிற இத்தனை நடிகர்களையும் ஒரே படத்தில் கொண்டு வந்து நடிக்க வைத்த இளம் இயக்குனருக்கு ரொம்ப பெரிய விஷயம். அதுக்காக இயக்குனருக்கு வாழ்த்துக்கள். யோகி பாபு, ஜெய் காம்பினேஷனில் படம் சூப்பராக வந்திருக்கிறது. யோகி பாபு வெறும் காமெடி நடிகராக மட்டும் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை.
இமான் சொன்னது:
அதையும் தாண்டி ஒரு முக்கியமான ரோட்டில் நடித்திருக்கிறார். ஜெய் அப்போ பார்த்த மாதிரியே அப்படியே எவர்கிரீன். ஜெய்க்கு வாழ்த்துக்கள். இந்த படம் அவருக்கு ரொம்ப முக்கிய படமாக அமையும். தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிற யுவராஜ் சாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதுவே உங்களுக்கு ரொம்ப பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. யார் நல்லவன், நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன், யார் உண்மையான நல்லவன் எல்லா தெளிவையும் அடுத்தடுத்து உங்கள் தயாரிப்புக்கு போதுமான அனுபவத்தையும் இந்த பட தயாரிப்பு கொடுத்து இருக்கிறது என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இயக்குனர் பேட்டி:
இவரை தொடர்ந்து இயக்குனர் பிரதாப், இந்த கதையை தயாரிப்பாளர் யுவராஜ் சாரிடம் சொன்னபோது அவர், ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த கேரக்டருக்கு யார் யார் போடலாம் என்றெல்லாம் பேசும்போது நிறைய நடிகர்களை சொன்னார். பட்ஜெட் அதிகமானதுக்கு பிறகும் அவர் பின்வாங்கவே இல்லை. இந்த படத்தோட சூட்டிங் அப்போ ரமலான் மாதம். இந்த படத்தோட ஹீரோ ஜெய் அப்போது நோன்பு இருந்தார். அப்ப கூட அவர் எங்கேயும் சலிக்காமல் நடித்துக் கொடுத்திருந்தார். அதற்காக ரொம்ப பெரிய நன்றி .
https://www.youtube.com/watch?v=dKb_2ci-8N8
பட அனுபவம் குறித்து சொன்னது:
யோகி பாபு சார் எல்லா வகையிலும் இந்த படத்துக்கு முக்கியமானவர். ஜெய் அம்மான்னு சொல்லும்போது + கீர்த்தனா நோ சொன்னாங்க. சத்யராஜ் சாருக்கு ஜோடியாக நடிக்கணும் என்று சொன்னதுமே ஓகே சொல்லிட்டார். எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நல்ல படமா கொண்டு வர முயற்சி பண்ணி இருக்கிறோம். இதற்குப் பிறகு இதை மக்கள் கையில் கொடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.