தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகளை பாட வைக்க அழுத்தம் கொடுக்கிறார்கள் - டி. இமானின் மனக்குமுறல்
இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவன் இயக்கத்தின் தற்போது உருவாகியிருக்கும் படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர். இந்த படத்தில் பவ், அதுல்யா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=C8Cg3MceKhg
கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக அருண் விஜய் கலந்திருந்தார். அப்போது விழாவில் டி. இமான், இந்த படத்திற்கு இசையமைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
விழாவில் டி.இமான்:
காரணம், இந்த படத்தில் சரியாக, முறையாக, பயிற்சி பெற்ற பின்னணி இசை பாடகர்களைப் பாடி இருக்கிறார்கள். இதை நான் ரொம்ப நல்ல விஷயமாக பார்க்கிறேன். பொதுவாக படங்களில் நடிகர், நடிகைகள் தான் பாட வைப்பார்கள். அவர்களே பாட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பாங்க. அந்த அழுத்தம் எல்லாம் இந்த படத்தில் எனக்கு கிடையாது. சரியான, முறையான பாடல்களை இந்த படத்தில் பாடி இருப்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
https://www.youtube.com/watch?v=BGyIuzxU0Es
இசை குறித்து சொன்னது:
கார்த்திக், விஜய் பிரகாஷ், சின்மயி, ஹரிசரண், கானா தாரணி, கானா குணா எல்லோருமே முறையாக பயிற்சி பெற்ற பாடகர்கள். இவர்கள் இசையும், பாடலையும், தொழிலாகவும், வாழ்க்கையாகவும் கொண்டிருப்பவர்கள். இப்படி முறையான பாடகர்களை இந்த படத்தில் பாட வைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று மனம் திறந்து கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டி.இமான் திரைப்பயணம்:
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.
டி.இமான் குறித்த தகவல்:
அதிலும், அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபகாலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே.