முடிவுக்கு வந்த 13 ஆண்டு திருமண வாழ்கை - விவாகரத்தை அறிவித்த இமான். அதுவும் எப்போ நடந்திருக்கு பாருங்க.

By Rajkumar · 29/12/2021

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான இமான் தன் மனைவியை விவகாரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார். தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இமான் ஒருவர். விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமளிப்பாளராக அறிமுகமானார் இமான்.

அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் விஜய் அஜித் துவங்கி சிவகார்த்திகேயன் என்று பலர் பாடங்களுக்கு இமான் இசையமைத்து உள்ளார். அதிலும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் மூலம் இவருக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இமான் மனைவி மோனிகா :

இறுதியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் Bgm களும் பெரும் ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்ன இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்களும் பிறந்தனர்.

இமானின் இரு மகள்கள் :

கடந்த ஆகஸ்ட் மாதம் கூட தனது மகள் Blessicaவின் பிறந்தநாளின் போது தன் மகளின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் இமான். இப்படி ஒரு நிலையில் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுவும் தங்களுக்கு விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டே நடந்துள்ள விவகாரத்து :

இது குறித்து தெரிவித்து இருக்கும் அவர் ' என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல.

இமான் முன் வைத்த வேண்டுகோள் :

இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இமானின் இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full