முதல் மனைவியை பிரிந்த நிலையில் இசையமைப்பாளர் இமான் இரண்டாம் திருமணம் செய்து உள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.

அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இது குறித்து இமான் கூறிய அவர், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

Advertisement

இமானின் உருக்கமான பதிவு :

நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான்.

இரண்டாம் திருமணம் :

விவகாரத்து குறித்து பேசிய இமான், விவாகரத்து மிகப்பெரிய விஷயம், எப்போது ஆண் மீதுதான் குற்றம் சொல்வார்கள். ஆனார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க கூடாது என விரும்பினேன். ஆனால் நடந்துவிட்டது, எனது குழந்தைகளை என் மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும், அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இமான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தார்.

Advertisement

தனது மறுமணம் குறித்து இமான் :

தனது மறுமணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இமான் ‘ மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும்’ கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இமானின் இரண்டாம் திருமணம் :

இப்படி ஒரு நிலையில் இமானின் இரண்டாம் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. இமான், மணப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது . மேலும், நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ், குட்டிபத்மினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement