இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். பெரும்பாலும் இசை என்றாலே எல்லோரும் இளையராஜா, ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா பெயரை தான் அதிகம் சொல்வார்கள். அந்த அளவிற்கு இவர்களுடைய பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், சில இசையமைப்பாளர்களின் பெயர்கள் வெளியே தெரியவில்லை என்றாலும் அவர்களுடைய பாடல்களும் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வரிசையில் ஒருவர் தான் கார்த்திக் ராஜா. இவர் இளையராஜா இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் ஆவார். இவர் முதன்முதலாக தமிழ் சினிமா உலகில் 1992 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த ‘பாண்டியன்’ என்ற படத்தில் தான் இசையமைத்திருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

Advertisement

இளையராஜா குடும்பம்:

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் இடம்பெற்ற ‘சந்தனம் தோத்துச்சு’ என்ற பாடலை மறைந்த பாடகி பவதாரணி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் மட்டும் இல்லாமல் இவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜா, சகோதரி பவதாரணியும் மிகப் பிரபலமான பாடகர்கள் தான். கார்த்திக் ராஜா சிறு வயதிலிருந்தே முறையாக இசையை கற்று கொண்டவர்.

கார்த்திக் ராஜா குறித்த தகவல்:

இவர் தன்னுடைய 13 வயதில் இசை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, அஜித்- விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த ‘உல்லாசம்’ படத்தில் இவருடைய பாடல்கள் தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்தது. பின் கமல் பாடிய முத்தே முத்தம்மா என்ற பாடல் இன்றும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது. அதே படத்தில் வீசும் காற்றுக்கு பூவை தெரியாது, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ படத்தில் இடம்பெற்ற இந்த சிறு பெண்ணை எங்கு பார்த்தேன் என்ற டூயட் பாடலும் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisement

கார்த்திக் ராஜா பாடல்கள்:

மேலும், கட்டான பொண்ணு ரொமான்டிக்கா, காதலா காதலா, காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சிலர் தேவாவின் இசையில் வெளிவந்த பாடல்களை அவர்தான் பாடினார். அந்த காலகட்டத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு போட்டியாக கார்த்திக் ராஜா வந்தார். தன்னுடைய தந்தைக்கு நிகராக பெயர் வாங்கும் அளவிற்கு இவர் பாடல்களை கொடுத்திருந்தார்.

Advertisement

கார்த்திக் ராஜா இசைப்பயணம்:

இளையராஜா பணியாற்றிய பல படங்களுக்கு பின்னணி இசை கார்த்திக் ராஜா கொடுத்திருந்தார். இருந்தாலும் அவர் தொடர்ந்து பாடல்களை அமைக்க முடியவில்லை. காரணம், கார்த்திக் ராஜாவுக்கே பின்னணி இசை கொடுப்பதில் தான் ஆர்வம். இளையராஜா மட்டுமில்லாமல் பல்வேறு இசை அமைப்பாளர் பணியாற்றிய படங்களுக்கும் இவர் பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இன்றும் காலத்தால் அழிக்க முடியாத பல புகழ்பெற்ற பாடல்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவருடைய இசைஞானம் வெளியில் தெரியவில்லை என்பதுதான் வருத்தம்.

Advertisement