நான் போட்ட எந்த மியூசிக்குமே மாரிக்கு பிடிக்கல, ஏன்னா - இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஓபன் டாக்
பைசன் படத்தின் நன்றி விழாவில் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பைசன் பட விழா:
இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பைசன் படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பட குழுவினர் கலந்துகொண்டு நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள். பின் விழாவில் பேசிய இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, நான் சினிமாத்துறையில் நிறைய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். ஆனால், என்னையே புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்தது இந்த படத்தில் தான். என்னை நம்பிய ரஞ்சித் அண்ணாவுக்கும், மாரி செல்வராஜ் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி.
நிவாஸ் பேட்டி:
இந்த படத்தில் நான் போட்ட எந்த மியூசிக்மே மாரி சாருக்கு திருப்தியை கொடுக்கவில்லை. நான் என்ன மியூசிக் போட்டாலும் அடுத்து வேற என்ன? என்று மாரி சார் கேட்டுக் கொண்டே இருப்பார். ஆனால், இந்த படம் முடிந்து நான் இன்டர்வியூ கொடுக்கும்போது மாரி சார் என்னைப் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிட்டு பேசினார். அப்பதான் என்னுடைய பெஸ்ட் காக அவர் எவ்வளவு தூரம் சிரமப்பட்டு இருக்காருன்னு புரிந்து கொண்டேன். சில நேரங்களில் நமக்கே நாம யாருன்னு தெரியாது. இந்த படத்தில் தான் நான் யார் என்று என்னை புரிய வைத்தது மாரி சார்.
https://www.youtube.com/watch?v=td0uSJB695E
மாரி செல்வராஜ் பற்றி சொன்னது:
இதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். திறமையான படக்குழுவோடு சேர்ந்து பணியாற்றியதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர்களுடன் இணைந்து வேலை செய்யும்போது அதனுடைய வெற்றி எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் வேலை செய்யும் போது தான் உணர்ந்தேன். பைசன் படத்திலிருந்து இசை என்பது ஒருவரை மேம்படுத்துவதற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். இனி நான் செய்யக்கூடிய ஒவ்வொரு இசையும் அதற்காகவே இருக்கும் என்ற பொறுப்புணர்வு இருக்கிறது. என்னுடைய இசையை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்திற்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.