இசை இரைச்சலாக இருக்க இயக்குனர்கள் தான் காரணம்- இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஓபன் டாக்

By subhashini · 10/7/2025

இசை தொடர்பான சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் இசையமைப்பாளர்கள் இசை என்ற பெயரில் இரைச்சலை தான் கொடுக்கிறார்கள். பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றெல்லாம்
குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, சூர்யா நடித்த கங்குவா படத்தில் இரைச்சல் மட்டும் தான் இருந்தது.

அதில் வேறு ஒன்றுமே இல்லை என்றெல்லாம் ட்ரோல் செய்து இருந்தார்கள். அதோடு வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களை திட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறியிருப்பது, நேஷனல் அவார்டு தொடங்கி ஆஸ்கர் அவார்டு வரை சிறந்த ஒலிக்கலவை என்ற ஒரு துறைக்கு விருது கொடுப்பார்கள்.

சாம் சி எஸ் பேட்டி:

ஒலிக்கலவை என்றால் பின்னணி இசை, சவுண்ட் எபெக்ட்ஸ், வசனம் ஆகியவை மிக்ஸ். என்னுடைய வேலை ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைப்பது மட்டும்தான். அதை எவ்வளவு நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு நிறைய செயல்முறைகள் இருக்கிறது. சவுண்ட் எபெக்ட், வசனங்களை எல்லாம் வைத்து ஒரு அவுட் வரும். அதற்கும் இசையமைப்பாளர்களுக்கும் சம்பந்தம் கிடையாது.

இசை இரைச்சல்:

கேஜிஎப் படத்திற்கு பிறகு இசையை சத்தமாக வைத்து விட்டால் அந்த காட்சிகள் மக்களிடம்
பிரபலமாகும், தப்பித்து விடும் என்றெல்லாம் எண்ணம் இருக்கிறது. இதனால் இயக்குனர்கள் இசையை சத்தமாக வைக்கிறார்கள். என்னென்ன படங்கள் இப்படி இருக்கிறது என என்னால் சொல்ல முடியாது. நான் தியேட்டரில் பார்க்கும்போது 'நாம இப்படி பண்ணலையே' என்றெல்லாம் எனக்கு தோன்றுகிறது.

சாம் சி எஸ் கொடுத்த விளக்கம்:

அதை பார்க்கும் போது எனக்கே எரிச்சலாக தான் இருக்கும். இதற்கும் இசையமைப்பாளர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இசை சவுண்ட், எபெக்ட், வசனம் இதை எல்லாத்தையும் மிக்ஸ் செய்யும் துறையில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் இசையமைப்பாளர்களையே கை காட்டுகிறார்கள். அதோடு இன்னொரு பிரச்சினையுமே இருக்கிறது. ஒரு திரையரங்குக்கு சென்ற போது ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை. ஒரு மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்சில் ஆங்கில படம் ஓடும்.

இசையமைப்பாளர்கள் ப்ரச்சனை:

அவர்களின் மிக்ஸ் அதிக சத்தத்தில் வைத்தால் தான் படமே பார்க்க முடியும். அடுத்த ஷோவில் அதே ஸ்கிரீனில் ஒரு தெலுங்கு படமும், மாஸ் படமும் வைத்தால் அதில் பிரச்சனை வருகிறது. ஒவ்வொரு தியேட்டருக்கும் இதுபோல பிரச்சனைகள் இருக்கிறது. இதுக்கெல்லாம் இசையமைப்பாளர்களை குறை சொல்லக்கூடாது. இனி உங்களுக்கு இரைச்சலாக இருந்தால் ஒலிக்கலவை செய்யும் குழுவை தான் குறை சொல்லுங்கள். அவர்கள் குறைத்துக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full