கழுத்தை அறுத்துக்கொண்டு டிக் டாக் வாலிபர் இவர் தான்..!உண்மையில் ரத்தம் வந்ததா..!ஆதாரம் இதோ..!

By Rajkumar · 3/12/2018
சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். [embed]https://twitter.com/Writer_Naina/status/1069292079304462336[/embed] இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நபர் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த ரத்தம் வடிந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆகாஷ் என்ற நபர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் ரத்தம் வடிவது உண்மை இல்லை காரணம், அந்த விடியோவை நீங்கள் நன்றாக உத்துப்பார்த்தால் ரத்தம் வருவதற்கு முன்பாக அந்த வீடியோ ஒரு முறை கட் ஆகி ஒளிபரப்பாகும். அதே போல அந்த கத்தியிலும் ஏற்கனவே ரத்தம் போன்ற ஒன்றை தடவி இருப்பதையும் நீங்கள் அந்த வீடியோவை நன்றாக உற்று நோக்கினால் தெரியும்.அதே போல இந்த விடீயோவிற்கு பின்னரும் அவர் வேறு ஒரு மியூசிக்கலி வீடியோ ஒன்றயும் போட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவரது கழுத்தில் எந்த தழும்பும் இல்லை.அவருடைய ம்யூசிக்கலி ஐடி akashakash149
Tamil Behind Talkies AMP · Quick view
View full