இப்போ வரைக்கும் நான் Wineshop வாசல்ல படுத்துகிடக்க மாதிரி சொல்றாங்க - 50 வயதில் 3 டிகிரி பெற்ற காரணம் குறித்து முத்துக்காளை.

By Rajkumar · 26/12/2023

கைச்சுவை நடிகர் முத்துக்காளை படித்து மூன்று பட்டம் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் எண்ணற்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் முத்துக்காளை. இவர் என் புருஷன் குழந்தை மாதிரி’ என்ற படத்தில் ‘செத்து செத்து விளையாடுவோமா என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமடைந்தார்.

அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் விட்டதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், நான் சாகவில்லை, நன்றாக தான் இருக்கிறேன் என்று பேட்டி முத்துக்காளை கொடுத்துள்ளார்.

முத்துக்காளை பேட்டி:

அதில் அவர், எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் சங்கம்பட்டி. என்னுடைய கனவு ஃபைட் மாஸ்டர்தான். ப்ரூஸ்லி, ஜாக்கிசான் படங்கள் என்னுடைய ஃபேவரைட். 12 வயசிலேயே சண்டை கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். 18 வயசிலேயே கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன். 20 வயதில் கராத்தே வகுப்பு எடுத்தேன். கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் என்னிடம் கராத்தே கத்துக்கிட்டாங்க. ஸ்டண்ட் சிவா மாஸ்டர், வின்சன்ட் செல்வா, வடிவேலு இவங்கதான் எனக்கான பாதையை சரியா அமைச்சுக் கொடுத்தவங்க.

https://twitter.com/ThanthiTV/status/1739497190865658304

சினிமா அனுபவம்:

நான் நடித்த முதல் படம் முரளி நடித்த ‘இரணியன்’. அடுத்தது பிரபு நடித்த ‘பொன்மனம்’. இந்த படத்தில் தான் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பிச்சேன். அந்த படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார். ஸ்டன்ட் பண்ணிட்டு இருந்த எனக்கு காமெடி செட் ஆகும்னு சொன்னது அவர்தான். அதுக்கப்புறம் தொடர்ந்து காமெடியில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் நடிக்கும் போது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எனக்கு ஏற்கெனவே ஃபைட் என்கிற தொழில் இருக்கு.

முத்துக்காளை வாங்கிய பட்டம்:

நடிப்பு வந்தா வரட்டும் வரலைனா போகட்டும் என்கிற ரதியில்தான் கேமரா முன்னாடி நின்னேன். இதுவரை 240 படங்களுக்கும் மேல் நடிச்சிட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் முத்துக்காளைக்கு மூன்று பட்டங்கள் கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, நடிகர் முத்துக்காளை அவர்கள் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்று இருக்கிறார். நேற்று வெளியான B.Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

https://twitter.com/kayaldevaraj/status/1739193681801052324

குவியும் பாராட்டு:

இவர் தமிழ்நாடு சிறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டில் பி ஏ வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பின் முத்துக்காளை 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் பாடத்தில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் முத்துக்களையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full