பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்து - காயங்களுடன் விஜய் டிவி சீரியல் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்.

By Manikandan · 19/12/2022

விஜய் டிவி சீரியல் நடிகர் விபத்தில் சிக்கி இருக்கும் செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.சமீப காலமாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் விஜய் டிவியும் புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் முத்தழகு.

இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் மனம் தராமல் தைரியமாக போராடும் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது சீரியலில் பூமிநாதன், அஞ்சலி- முத்தழகு இருவரையும் திருமணம் செய்து இருக்கிறார். இதில் பூமிநாதன் தன்னுடைய மனைவியாக யாரை ஏற்றுக் கொள்வார்? என்ற திருப்பத்துடன் சீரிய ல் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்த மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆஷிஷ் சக்கரவர்த்தி. பார்ப்பதற்கு படு லூக்காக இருக்கும் இவர் தநங்கென தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100கே பின் தொடர்பவர்களை கொண்டுள்ளர். அதோடு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது பல புகைப்படங்களை தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அந்த பதிவில் நேற்று அவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அந்த பேருந்து விபத்துக்குளானது. அந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக நானும் என்னுடன் பயணித்த மற்ற பயணிகளும் சிறு சிறு காயங்களுடன் தப்பித்து விட்டோம். இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என அந்த பதில் அவர் கூறியிருந்தார்.

மேலும் அந்த பதில் தனக்கு அடிபட்ட காயங்களையும் பகிருத்திருந்தார். இந்த நிலையில் இந்த புகைப்படங்களில் அவருடைய ரசிகர்கள் பகிரவே பாலரும் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த பதிவானது சோசியல் மீடியாவில் வைரலாகி பலரும் இவரை விசாரித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full