சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது. அதில் சாதித்த சினிமா பிரபலங்கள், சாதனையாளர்கள், கிரிக்கெட் வீரர் என பல பேரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

பெரும் பொருட் செலவில் உருவாக இருந்த இந்த படத்தை ஸ்ரீபதி ரங்கசாமிஇயக்குவதாக இருந்தது. இந்த படத்தை தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. மேலும், இந்த படம் உருவாவது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாகவே நடைபெற்று வந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாகவும், பல்வேறு சர்ச்சைகள் காரணமாகவும் இந்த படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது. பின்னர் இந்த படத்திற்கு ‘800’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.

Advertisement

800 படத்தில் முதலில் விஜய் சேதுபதி:

இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டரும் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார். ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர்.

எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும், முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதராவானவர் எனக்கூறி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அதோடு இதுதொடர்பாக விஜய் சேதுபதிக்கு பல பிரபலங்கள் வேண்டுகோள் வைத்திருந்தார்கள். இயக்குனர் சேரன் முதல் சீனுராமசாமி வரை பல பேர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்,

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் விஜய் சேதுபதி. அதற்கு பிறகு இந்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இன்று ( ஏப்ரல் 17 ) முத்தையா முரளிதரன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பல ஹீரோக்களின் பெயர்கள் 800 படத்தில் நடிக்க பரிசீலினை செய்யப்பட்டது. இறுதியாக இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி சிவரகு, மதுர் மிட்டலை வைத்து படத்தை முடித்து உள்ளார். மதுர் மிட்ட வேறு யாரும் இல்லை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கிக்கொடுத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement