என் கணவர் அப்பாவி, பாலியல் படங்கள் தான் எடுத்தார் ஆபாச படம் எடுக்கல - ஷில்பா ஷெட்டியின் அருமையான வாக்குமூலம்.

By Rajkumar · 24/7/2021

ஆபாச படம் எடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் பற்றி ஷில்பா ஷெட்டி விசாரணையில் கூறியுள்ளது பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஷில்பா செட்டி பரிச்சயமானார்.

இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் இரண்டாம் குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றார் ஷில்பா ஷெட்டி.இந்த நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களைத் தயாரித்து அதை செயலியில் வெளியிட்டு பணம் சம்பாதித்தாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி கணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இதையும் பாருங்க :பொது இடத்திற்கு மாளவிகா அணிந்து வந்த உடை - பின்னாடி கோலத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார். மும்பையில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் ஆபாச படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ட்டுள்ளார். . ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோகளை பதிவிட்டு வந்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் குந்த்ரா ஆபாச படங்கள்  தயாரிப்பதில் ஈடுபடவில்லை. அவர் ஒரு அப்பாவி என்றும் பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட பாலியல் படங்களுக்கும்,  ஆபாச படங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை அவர் வலியுறுத்தினார் என்றும் கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full