'We Quit' - மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகி வெளியிட்ட எமோஷனல் வீடியோ

By krithika · 4/12/2024

மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகி கண்ணீரோடு வெளியிட்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. தனக்கென சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருந்த சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸில் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் மைனா நந்தினி நடித்திருந்தார். இதை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருக்கிறார். இதில் வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, இளங்கோ குமரவேல், நிதின் சத்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் .

சட்னி சாம்பார் படம் :

முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதில் நந்தினியின் நடிப்பு பாராட்டு பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து இவர் படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது நந்தினி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் கணவருடன் இணைந்து Youtube VLOG வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீப காலமாக தனது கணவருடன் இணைந்து 'புள்ளத்தாச்சி' என்ற தொடரை வெளியிட்டு வருகிறார்.

புள்ளத்தாச்சி:

இதுவரை புள்ளத்தாச்சி என்ற தொடரின் இரண்டு எபிசோடுகள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது அந்த தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மைனா நந்தினி தனது கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், 'புள்ளத்தாச்சி தொடரை எடுக்க நாங்கள் இலங்கைக்குச் சென்று இருந்தோம். அங்கு பல இடங்களில் 11 நாட்கள் ஷூட் செய்து ஹார்ட் டிஸ்கில் ஸ்டோர் செய்து வந்தோம். இப்போ அதை எடுத்து சிஸ்டத்துல போட்டு பார்த்தா எதுவுமே இல்ல. அது என்ன ஆச்சுன்னு எங்களுக்கு தெரியல. நாங்க இதுவரைக்கும் பட்ட கஷ்டங்கள் பலனில்லாமல் போயிடுச்சு.

கண்ணீருடன் வீடியோ:

மேலும், எங்களோட சேமிப்பு எல்லாத்தையும் இதுல போட்டு விட்டோம். ஆனால், இப்போது எல்லாமே மொத்தமா போயிடுச்சு, என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை என்று மைனா பேசியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய மைனாவின் கணவர் யோகி, 'ரெண்டு ஹார்ட் டிஸ்கை தனித்தனி ஹார்ட் டிஸ்கா கொண்டு வர கொஞ்சம் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் ஒரே ஹார்ட் டிஸ்கா கொண்டு வந்தோம். ஆனால், இப்போ ஹார்ட் டிஸ்க் கீழ விழுந்து அதுல ஃபுட்டேஜ் எதுவுமே இல்ல. அதுல உள்ள ஃபுட்டேஜ் எல்லாத்தையும் மீட்க லட்சங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=ePE7SUloMY4&t=562s

அடிமேல அடிதான் :

அதற்கான காசும் எங்களிடம் இல்லை. ஏனென்றால் எல்லா காசியும் போட்டு தான் நாங்க இலங்கைக்கு சூட்டிங் போனோம். மொத்த காசும் போச்சு. ஆனா, உங்களிடம் காசு இல்லையா? அதான் விளம்பரம் வருதேனு கூட நீங்க கேட்கலாம். அதெல்லாம் இல்ல. இந்த தொடர் ஆரம்பிச்ச போதில் இருந்து அடிமேல அடிதான். முதலில் உடம்பு சரியில்ல, இப்போ ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்ததால் ஒர்க் ஆகல. அதே போன்று மீண்டும் சூட் செய்வதற்கு அதிக செலவு ஆகும். இதனால் திரும்ப எடுத்தால் இன்னும் நஷ்டம்தான் வரும். எனவே புள்ளத்தாச்சி தொடரை இதோடு முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறி இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full