பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் ஹோட்டலில் தங்கி இருந்த அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்து இருந்தார். சித்ராவின் மரணச் செய்தியை கேட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்தார்கள். அதேபோல சித்ராவின் மரணம் குறித்து பேட்டி கொடுத்த மைனா நந்தினி சித்ரா தற்கொலை செய்யும் அளவிற்கு கோழ கிடையாது என்று கூறியிருந்தார்

என்னதான் சித்ராவின் மரணம் என்று அறிவிக்கப்பட்டாலும் சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது அவரது தற்கொலைகளில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று தான் பலரும் கூறி வருகிறார்கள் அதேபோல் நடிகை சித்ராவிற்கு அவரது கணவரும் தாயார் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது இப்படி சித்ராவின் விஷயத்தில் எத்தனையோ விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் நடிகை மைனா நந்தினி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்

Advertisement

அதில், மீடியானா இப்படி தானா. எதற்கு இந்த வாக்கியம் ? இந்த தேவையில்லாத குற்றச்சாட்டை தயவுசெய்து நிறுத்துங்கள். ஒருவரின் தொழிலை வைத்து அவரை எடை போட வேண்டாம். ஒரு மனிதனாக மனிதனை மதியுங்கள். மனச்சோர்வு மன அழுத்தம் எல்லாம் மீடியாவில் இருக்கும் நபர்கள் மட்டும் எதிர் கொள்ளும் பிரச்சனை கிடையாது. இது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு விஷயம்தான். அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் தனிப்பட்ட வலி, போராட்டங்கள். அழுத்தங்கள் என்று இருக்கும்.

ஒருவரின் தொழிலை வைத்து அவர்களை காயப்படுத்தாதீர்கள். அவர்கள் என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆதரவு தெரிவிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இந்த சமூகத்தில் இருக்கும் வார்த்தைகளை நம்பி ஒருவரைப் பற்றிய பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கொல்ல வேண்டாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள். #Stopjudging #Stopkillingdreams என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement