மைனா உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய யோகேஷ் - சர்ப்ரைஸ்ஸான மைனாவின் உருக்கமான பதிவு.
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.
மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்து கொண்டார் மைனா நந்தினி.
நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றுது. கடந்த ஆண்டு தான் மைனா நந்தினிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சீரியலில் நடிக்க வந்துவிட்டார் நந்தினி.
தற்போது இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் துவங்கி உள்ள Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இப்படி ஒரு நிலையில் யோகேஷ், தனது காதல் மனைவி மைனாவின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள மைனா,நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத சர்ப்ரைஸ் உன்கிட்ட லவ் யூ, நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி தான் கணவர் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.