வெக்கமா இல்ல, காசுக்காக ஏன்னவெனா பண்வீங்களா - மைனா கணவரை தற்போது திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 20/9/2022

பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் கணவர் நடித்துள்ள விளமபரத்தின் வீடியோவை கண்டு நெட்டிசன்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

மைனா நந்தியின் திரைப்பயணம்:

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும் இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி இருந்த அரண்மனை 3 படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஜோடியாக மைனா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Junglee Rummy (@junglee_rummy)

இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருந்தது. அதேபோல் இவர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிறது.

யூடுயூப் Promotionகள் :

இதனை தொடர்ந்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் தன் கணவர் யோகேஷுடன் சேர்ந்து பல வீடியோக்களில் பல பொருட்களை ப்ரோமோஷன் செய்தும் வருகின்றனர்.

யோகேஷ்ஷை கழுவி ஊற்றும் ரசிகர்கள் :

இப்படி ஒரு நிலையில் யோகேஷ், ரம்மி விளமபரத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராம் வைரல் ஆக அதை பார்த்த இன்ஸ்டா வாசிகள் பலரும் அவரை 'காசுக்காக என்ன வேனா பண்ணுவீங்களா, கேவலமா இல்ல ' என்று திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த விளமபரத்தில் அவர் பல மாதங்களுக்கு முன் நடித்து இருந்தார். ஆனால், ஒரு சிலருக்கு தற்போது அந்த விளம்பரம் இன்ஸ்ட்டாவில் வரவே அவரை தற்போது திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full