அந்த போஸ்டரை நான் வெளியிட்டு இருந்தா பிசாசு 2 ரிலீஸ் ஆகி இருக்கும், ஆனா - மிஷ்கின் வேதனை
'பிசாசு 2' படம் குறித்து மிஷ்கின் பேசி இருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் மிஷ்கினின் சர்ச்சை பேச்சு தான் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஷ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். தற்போது மிஷ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 'பாட்டில் ராதா' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மிஷ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை. இங்கு உள்ளவர்கள் பெரும் குடிகாரர்கள் தான். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. இயக்குனர் இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். சோசியல் மீடியாவில் பலருமே மேடை நாகரீகம் இல்லாமல் மிஷ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்ட மிஷ்கின்:
அந்த வகையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் பட விழாவில் மிஷ்கினை வெளுத்து வாங்கி இருந்தார். இவரை அடுத்து பல பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் நடந்த 'பேட் கேர்ள்' படத்தின் விழாவில் மிஷ்கின் பேசியிருந்தார். பேட் கேர்ள் திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். அனுராக் காஷியப் முக்கியமான இடத்தில் நடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் விழாவில் மிஷ்கினும் கலந்து கொண்டு தனக்கு எதிராக பேசியவர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஓப்பனாக பேசியிருந்தார்.
பிசாசு 2 குறித்து:
அப்போது தொடர்ந்து பேசிய மிஷ்கின், பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைக்க நான் முடிவு செய்தேன். அதற்கான போட்டோ சூட் எடுக்க எனது உதவி இயக்குனர் ஈஸ்வரி என்பவரை அனுப்பினேன். அந்த போட்டோ சூட் நடக்கும் போது நான் வெளியே வந்து சிகரெட் பிடித்து விட்டு எனது ஆஃபீசுக்கு வந்து விட்டேன். பின்பு ஆண்ட்ரியாவிடம் போன் செய்து, உன்னுடைய நிர்வாண போஸை நான் படத்தின் போஸ்டரில் வைத்தேன் என்றால், எல்லாரும் என்னைப் போல அந்த நிர்வாணத்தை இலக்கிய நயத்தோடும், தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா என்று தெரியாது. அதனால் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
ஆண்ட்ரியாவின் அந்த போஸ்:
நான் அந்த நிர்வாண போஸை பயன்படுத்தி இருந்தால், படத்துக்கு கூட்டமும் வந்திருக்கும். படமும் ரிலீஸ் ஆகி இருக்கும். ஆனால், நான் அப்படி செய்யவில்லை. அப்படிப்பட்டவன் நான். அதேபோல் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தின் சேனல் ரைட்ஸை பெரிய தொகைக்கு விற்றுத் தருகிறேன் என்று சொல்லி ஒரு பெரிய இயக்குனர் என்னை அழைத்துச் சென்றார். ஒரு ரூமுக்குள் சென்றதும் 75 லட்சம் ரூபாய்க்கு அதைக் கேட்டார்கள். நான் ரெண்டு கோடி ரூபாய் கேட்டேன். மேலும், அந்த ரூமுக்குள் 20 தடியர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை மிரட்டி அந்த அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கினார்கள்.
https://www.youtube.com/shorts/GUX9lwf9hGc
ரூமில் வைத்து மிரட்டினார்கள்:
உடனே நான் அந்த செக்கை கிழித்து போட்டு நான் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். மீண்டும் கஷ்டப்பட்டு வென்றுகொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்படி எனக்கு துரோகம் செய்த இயக்குனர் இன்னுமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று மிஷ்கின் பேசியிருந்தார். தற்போது இவர் விஜய் சேதுபதியை வைத்து 'ட்ரெய்ன்' படத்தை இயக்கிய வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு அவர்கள் தயாரிக்கிறார். அதேபோல், கடைசியாக 'வணங்கான்' படத்தில் நீதிபதியாக நடித்து கலக்கியி ருந்த மிஷ்கின், தற்போது LIC, டிராகன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.