'பொறுக்கி பய' ட்ரைலரில் இடம்பெற்ற வசனம் - மீண்டும் விஷால் குறித்து மேடையில் பேசிய மிஸ்கின்

By Rajkumar · 9/8/2023

மேடையில் விஷாலை திட்டியது குறித்து இயக்குனர் மிஷ்கின் அளித்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், மிஸ்கின் அவர்கள் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார்.

இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருக்கிறார். இந்த முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும், இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்தில் மிஸ்கின் கூறியிருந்தார். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

மிஸ்கின் நடித்த படம்:

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதை அடுத்து சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் மிஸ்கின் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் குறித்து மிஷ்கின் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாகி வருகிறது.

விஷால் குறித்து மிஸ்கின் சொன்னது:

அதாவது, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடியே திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஸ்கின் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், அந்த ட்ரெய்லரில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷாலை இயக்குனர் மிஷ்கின் பொறுக்கி பைய என்று மேடையில் திட்டி இருந்த வசனம் இடம் பெற்று இருக்கிறது. இது குறித்து மிஸ்கின், விஷால் நல்ல மனிதர். அது நான் கோபத்தில் சொன்ன வார்த்தை. அதற்கு பிறகு அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று நான் அனைவரிடமும் கூறிவிட்டேன். ஆனால், இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.

மிஸ்கின்-விஷால் சண்டை:

விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இனிமையான மனிதர். அவருக்கு என்னை விட அதிக ஈகோ இருக்கிறது. அவர் என்னிடம் பேசவும் மாட்டார். விஷால் படத்தை நான் இயக்க மாட்டேன் பொறுக்கி பைய என்ற வார்த்தையும் நான் பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தினுடைய படப்பிடிப்பு நடைபெற்ற போது தான் இவர்களுக்கு இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு மிஸ்கின் சரியான திட்டமிடுதல் இல்லாததால் விஷாலுக்கு பல கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவதம் பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் அந்த படப்பிடிப்பு ரத்து செய்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தையும் விஷாலே இயக்கி கொள்வதாக கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full