நான் விஜய் ஆண்டனி படத்தை பாக்கவே மாட்டேன், ஆனால் - மேடையில் மிஸ்கின் ஒபன் டாக்

விஜய் ஆண்டனி பற்றி மேடையில் மிஸ்கின் ஒபன் டாக்

By subhashini · 13/6/2026

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பற்றி இயக்குனர் சசி சொன்னது, சொல்லாமலே படத்தின் உடைய கிளைமாக்ஸில் முதலில் நாக்கை வெட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் கிடையாது. வேறொரு கிளைமாக்ஸ் தான் எழுதி வந்தேன்.

நூறு சாமி படம்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் உட்பட பலருமே கலந்து கொண்டு படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி இயக்குனர் சசி. சினிமாவில் சாமியோ கிடையாது. எப்போதும் ஒரு தாய் உள்ளத்தோடு பார்க்கக் கூடியவர் சசி. ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மையை பார்த்து நான் அதிசயப்படுவேன். பெண்மை தன்மை அதிகமாக இருக்கும் மனிதர்கள் மிக சிறந்தவர்களாக இருப்பார்கள்.

மிஸ்கின் பேசியது:

இந்த நூறு சாமி படத்தினுடைய கதையை எழுதி முடித்த பிறகு என்னை அழைத்து, எனக்காக ஒரு இரண்டு மணி நேரம் உன் அலுவலகத்தை விட்டு உன்னால் வெளியே போக முடியுமா? என்று கேட்டார். அதற்கு பிறகு நானும் வெளியே போனேன். என் உதவி இயக்குனர்களிடம் இந்த கதையை சொன்னார். அவர் போன பிறகு 10 நாட்களுக்கு இந்த கதையை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு மூன்று நாட்கள் இதைப் பற்றி என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசிக் கொண்டே இருந்தேன். இப்போது நான் நிறைய படம் பார்ப்பது இல்லை. நான் பார்க்கும் படம் நல்ல படமாக இல்லை என்றால் எனக்கு காய்ச்சல் வந்துவிடும். என்னால் படமே எடுக்க முடியாது.

விஜய் ஆண்டனி பற்றி சொன்னது:

நல்ல படம் பார்த்தால் தான் எனர்ஜி கிடைக்கும். இந்த சமுதாயத்தின் விதியை எழுதிய ஆண்கள் இந்த சமூகத்தின் சட்டதிட்டங்களை எழுதி வரும் ஆண்கள், பெண்களை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. நான் விஜய் ஆண்டனி படத்தை பார்த்தது கிடையாது. பிச்சைக்காரன் படம் ஹிட்டானதுமே சசிக்கு கால் பண்ணி, படம் பயங்கர ஹிட்டாமே என்று வாழ்த்தினேன். அப்போது சசி, சரி நீ படத்தை பார்த்திடாத அவ்வளவு நல்லா படம் கிடையாது என்று சொன்னார். ஒரு நடிகர் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தன்னையே அவர் புரிந்து கொள்கிறார். அப்படி இந்த படத்தில் உங்களை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் விஜய் ஆண்டனி என்று பல விஷயங்களை பேசி இருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full