தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கடத்தல் காரர்களாக ஆனந்த்ராஜ், வடிவேலு இருக்கிறார்கள். தாஸ் தாஸ் என்ற ஆனந்தராஜ் பெண்களை கடத்துகிறார். நாய் சேகர் என்ற வடிவேலு பணத்திற்காக விலை உயர்ந்த நாய்களை கடத்துகிறார். பின் ஆனந்த் ராஜுக்கு பிடித்த நாயை வடிவேலு கடத்துகிறார். இதனால் இருவருக்குமே பிரச்சனை ஏற்படுகிறது. இதனை அடுத்து தன் குடும்பத்தின் கடந்த காலம், அவர்களுக்கு ராசியான நாய் கடத்தப்பட்டது குறித்து வடிவேலுக்கு தெரிய வருகிறது.

Advertisement

இவர்களுடைய நாய் ஹைதராபாத்தில் இருக்கும் பெரும்புளியான மேக்சி இடம் இருக்கிறது. மேலும், தங்களுடைய குடும்பத்துக்கு ராசியான நாயை மீட்க வடிவேலு முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் வடிவேலு வெற்றி பெற்றாரா? இல்லையா? ஆனந்தராஜுக்கும் வடிவேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை சுமூகமானதா? என்பதே படத்தின் மீதி கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு அவர்கள் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஹீரோ நாய்களைக் கடத்தும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் சில இடங்களில் சொதப்பி இருக்கிறார் என்று சொல்லலாம். வடிவேலு படம் என்றாலே சிரிப்புதான் என்று நினைத்து சென்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால், ஆனந்த்ராஜ் உடைய நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது.

Advertisement

மேலும், வடிவேலும் ஆனந்த்ராஜூம் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை தவிர படத்தில் சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. படத்தில் வில்லன் மேக்ஸின் சகோதரிகளாக சிவானி நாராயணன் நடித்திருக்கிறார். இவர் இரண்டாம் பாதியில் தான் வருகிறார். சிவானியின் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது. சிறிது நேரம் வந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

Advertisement

இயக்குனர் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வடிவேலுடைய கம்பேக் படமான நாய் சேகர் பயங்கர ஹிட் கொடுத்திருக்கும். ஆனால், இயக்குனர் கதைக்களத்தில் சொதப்பிவிட்டார். பாடலும், பின்னணி செய்யும் படத்திற்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. ஆனால், படம் தான் வடிவேலுக்கு கை கொடுக்கவில்லை. ஒரு சில காமெடிகள் மட்டும் தான் படத்திற்கு செட் ஆகியிருக்கிறதே தவிர மற்றபடி பெரிதான சுவாரசியமோ நகைச்சுவையோ இல்லை. பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

வடிவேலு, ஆனந்த்ராஜ் நடிப்பு சிறப்பு

பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பக்க பலம்.

வடிவேலுவின் ரிட்டன்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருக்கிறது.

குறை:

திரைக்கதையில் இயக்குனர் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

பெரியளவு சுவாரசியம் படத்தில் இல்லை.

காமெடிகளும் செட் ஆகவில்லை.

முதல் பாதி ரொம்ப பொறுமையாக செல்கிறது.

மொத்தத்தில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் – ஏமாற்றம்

Advertisement