தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருமே போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்கள். இவர்களுடைய படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கும். இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட தமிழ் படம் ஒன்று கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைத்தளங்களில் பார்க்கப்பட்டு உள்ளது. அந்த படம் அஜித், விஜய் அவர்களின் படமும் இல்லை. அந்த படம் நடிகர் சிபிராஜின் படம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாய்கள் ஜாக்கிரதை.

இந்த படத்தில் சிபிராஜ், அருந்ததி, பாலாஜி வேணுகோபால், மனோபாலா, மயில்சாமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க நாய்க்கு தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் வேர்சன் police aur tiger என்ற பெயரில் வெளியானது.

Advertisement

மேலும், இந்த படம் கடந்த வாரம் பிரபல சேனலில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை 2.09 கோடி மக்களுக்கும் மேல் அதிகமாக பார்த்து உள்ளார்கள். அஜித்-விஜய் அவர்களின் போலீஸ் படத்தை விட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் மகன் தான் சிபிராஜ்.

2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எதற்கு பிறகு ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் சிபிராஜ்.

Advertisement
Advertisement