சத்தமில்லாமல் இரண்டாம் திருமணத்தை முடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை. வெளியான புகைப்படம்.

By Arun · 2/9/2023

தமிழில் ஒளிபரப்பான 'அன்பே சிவம்'. 'நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்த சீரியல் நடிகை தீபாவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது.

அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசனை போல இரண்டாம் சீஸனும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் நடித்த தீபா ஏற்கனவே 'அன்பே சிவம்' தொடரிலும் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர் பின்னர் படிப்படியாக சீரியல்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் அளவு முன்னேறினார்.

நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடர் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது சன் டிவி பிரியமான தோழி தொடரில் நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் இவர் கடந்த ஆண்டு தான் இவரது திருமண சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமா பிரிந்து தனியாக தான் வாழ்ந்துவந்தார். இப்படி ஒரு தீபாவிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருகிறார் தீபா.இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் தீபாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது திருமணத்தை பற்றி விரைவில் தீபாவே அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தீபாவின் இரண்டாம் திருமணம் பற்றி தேவையில்லாத பல்வேறு விதமான வதந்திகள் பரவியது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அமைத்து காத்து வந்த தீபா தற்போது அதர்க்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தீபா. மேலும், தனது கணவருடன் சேர்ந்து தீபா விரைவில் தனது திருமணத்தை பற்றிய விஷயங்களை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதோ எப்படியோ தீபாவின் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் !!

Tamil Behind Talkies AMP · Quick view
View full