நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி கொடுத்த புதிய மகா - வெளியான புகைப்படம் இதோ.

By Rajkumar · 4/11/2021

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இலிருந்து ரக்ஷிதா விலகியதை தொடர்ந்து ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளார்கள். சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். இந்த தொடரில் ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகள் நடித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா லாக் டவுனில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த இரண்டு நடிகைகளுமே சீரியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

இவரை தொடர்ந்து தான் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா இந்த தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவரும் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். இதுகுறித்து பதிவிட்ட ரஷிதா, நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன்.

இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று இந்த வடிவை எடுத்தேன் என்று பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ரக்ஷிதாவிற்கு பதில் யார் இந்த தொடரில் நடிக்கப்போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் தற்போது அரண்மனை கிளி சீரியலில் நாயகியாக நடித்துவந்த மோனிஷா இனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா வேடத்தில் நடிக்க இருக்கிறார். அவர் சீரியலில் நடித்த காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full