8 நாளைக்கு இவ்ளன்னு சம்பளம் பேசினாங்க ஆனா இன்னும் கொடுக்கல - அடுத்த சர்ச்சையில் சிக்கிய லியோ படக்குழு

By subhashini · 7/10/2023

லியோ படத்தின் நான் ரெடி பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பள பாக்கி கொடுக்காதது குறித்த புதிய சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாஸ்டர் படத்தின் கூட்டணிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் லியோ படம். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது.

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும்.

லியோ படம்:

அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள், விழா நடைபெறுவதற்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக `ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

படம் குறித்த அப்டேட்:

இருந்தாலும், லியோ ட்ரைலரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏராளமான திரையில் லியோ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 25000-30,000 திரையரங்கில் படம் வெளியாக இருக்கிறது. மேலும், படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் லியோ படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் லியோ படத்திற்கு புது தலைவலி ஒன்று வந்திருக்கிறது. அதாவது, லியோ படத்தில் வெளிவந்த முதல் பாடல் நான் ரெடி தான். இந்த பாடலுக்கு 1300 நடன கலைஞர்களை வைத்து விஜய் நடனமாடிருந்தார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

நான் ரெடி தான் பாடல் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் பாக்கி தரவில்லையாம். இது தொடர்பாக நடன கலைஞர் ஒருவர் பேட்டியில் கூறியது, லியோ படத்தில் நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடிய 1300 நபர்களில் நானும் ஒருவர். காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஷூட்டிங்கில் இருப்போம். எட்டு நாட்கள் சூட் என்று சொல்லி 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியிருந்தார்கள். ஆனால், ஆறு நாட்களிலேயே சூட்டிங் முடிந்து விட்டது. அதனால் 16,000 எனக்கு சம்பளம் தருவதாக சொன்னார்கள். சொல்லி நான்கு மாதங்கள் ஆகியும் இன்னும் சம்பளம் தரவில்லை.

https://twitter.com/TrollywoodX/status/1709770534001758611

நடன கலைஞர் அளித்த பேட்டி:

இது தொடர்பாக கேட்டாலும் இப்போ அப்போ என்று இழுத்தடித்துக் கொண்டே செல்கிறார்களே. இது தவிர சரியான பதில் வரவில்லை. இது எனக்கு மட்டும் இல்லை அந்த பாடலுக்கு நடனமாடிய 1300 நடன கலைஞர்களுக்கும் இதே நிலைமைதான். யாருக்கும் சம்பளத்தை கொடுக்கவில்லை. எங்களுக்கான சம்பளத்தை படத்தின் ரிலீஸுக்கு முன்பு தந்தால் நன்றாக இருக்கும். இதை நான் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்யவில்லை. என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. இதை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என்று வேதனையுடன் பேசி இருக்கிறார். இதற்கு லியோ பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full