“மீசையை முறுக்கு, நட்பே துணை” உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி அவர்கள் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் நான் சிரித்தால். இந்த படத்தை அவ்னி நடித்து மேக்ஸ் சார்பாக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா அவர்கள் தான் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ‘தமிழ் படம் 2’வில் நடித்த ஐஸ்வர்யா மேனன் நடித்து உள்ளார். இவர்களுடன் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மேலும், இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசை அமைத்து உள்ளார். படத்திற்கு ஓளிப்பதிவு செய்தவர் வாஞ்சிநாதன் முருகேசன். இந்த படம் இன்று வெளியாகி ஒரே சிரிப்பு மத்தாப்பு தான்.

Advertisement

கதைக்களம்:

இந்த படத்தின் கதாநாயகன் நம்ப ஆதி ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஆதிக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை உள்ளது. அதாவது சோகமாக இருந்தாலும், பதட்டமாக இருந்தாலும் அவருக்கு திடீரென்று சிரிப்பு வந்து விடும். விழுந்து விழுந்து சிரிப்பார் அதாவது இவர் தன்னை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரித்து விடுவார். இவரது சிரிப்பால் மற்றவர்கள் பயங்கர கடுப்பாகி விடுகிறார்கள். இந்த சிரிப்பால் அவரது வேலையை இழக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சிரிப்பால் இருவருடைய காதலும் பிரச்சனைக்கு ஆளாகிறது. இந்த சூழலில் தான் நம்ம ஹீரோ காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.

Advertisement

இந்த சமயத்தில் ரவிமரியாவும், கேஎஸ் ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை போட்டுக் கொள்ளும் ரவுடிகள். அப்போது கேஎஸ் ரவிக்குமாரை கொல்ல ரவிமரியா மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்கிறார். இந்த சூழ்நிலையில் நம்ப ஆதி எதிர்பாராத விதமாக கேஎஸ் ரவிக்குமார் இடம் மாட்டி கொள்கிறார். பின் கேஎஸ் ரவிக்குமார் இடம் இருந்து ஆதி தப்பித்தாரா? அவருடைய காதல் கைகூடியதா? தன் நண்பரை காப்பாற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. விழுந்து விழுந்து அடி படும் அளவிற்கு படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. வழக்கம் போல ஆதி இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement

வழக்கம் போல் படத்தில் ஆதி இசை சும்மா வெறித்தனம். காதல், காமெடி என படம் கமர்சியல் படமாக அமைந்திருக்கிறது. படத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கிறார். படத்தில் ஆதியின் தந்தையாக படவா கோபி நடித்திருக்கிறார். படத்தில் படவா கோபி அவர்களின் காமெடியும், டைமிங் பஞ்ச்சும் வேற லெவல்ல தூள் கிளப்பி இருக்கிறது. இந்த படத்திற்கு படவா கோபி காமெடி பலமே என்று சொல்லலாம். அதே போல் ஆதிக்கும் படவா கோபிக்கும் இடையிலான அப்பா மகன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ரவிமரியாவும், கேஎஸ் ரவிக்குமாரும் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பி உள்ளார்கள்.

பிளஸ்:

ஆதி இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படவா கோபி காமெடி படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

படத்தின் இசையும், காமெடிக்கும் வேற லெவல்.

மைனஸ்:

படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

கதாநாயகியின் கதாபாத்திரம் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

சில இடங்களில் மட்டும் காமெடி ரசிக்கும் படியாக உள்ளது.

இறுதி அலசல்:

படம் முழுக்க முழுக்க காமெடி,காதல் கலந்த கலவையாக உள்ளது. ஒருவன் தன் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினையை வைத்துக் கொண்டு எப்படி சமாளித்து வருகிறார் என்பதை இயக்குனர் சொல்ல முயற்சி செய்தாலும் காமெடி கோட்டை விட்டுள்ளார் சுந்தர் சி . மொத்தத்தில் “நான் சிரித்தால்” மற்றவர்கள் கொஞ்சம் காண்டு தான் ஆவார்கள்.

Advertisement