20 படங்கள் வைட்டிங், விஜய் ரசிகர் மன்றத்துல இளைஞரணி தலைவர் - ராகுல் தாத்தாவின் கலகல பேட்டி.

By Rajkumar · 20/5/2020

வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிப்பதற்கு சினிமா துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யாரும் எந்த வயதிலும் எப்படியும் மாறலாம் என்பதற்கு சினிமா ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. இந்த கூற்றை தற்போது நிரூபித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்து உள்ளவர் தான் நம்ம ராகுல்தாத்தா.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ராகுல் தாத்தா.

இவரது உண்மையான பெயர் உதயபானு இவர் தமிழ் சினிமாவில் 48 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகிறார்.ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆர் அலுவலகத்தில் தயாரிப்பு துறையில் இருந்து வந்த இவர் அடிமைப்பெண் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு அடிமையாக நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆருடன் 15 படத்தில் சிவாஜியுடன் 9 படத்திலும் நடித்துள்ளார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தனது வருங்கால படங்கள் குறித்து பேசியுள்ளார்.

தற்போது இவர் பேய் மாமா', `படைப்பாளன்', `கேட்காது என்று 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம் ராகுல் தாத்தா. மேலும், சக்தி சிதம்பரம் இயக்கி வரும் பேய் மாமா படத்தில் இவர் யோகி பாபுவுடன் இணைந்து நடித்துள்ளாராம். இந்த படத்தில் முதலில் வடிவேலு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சினிமா துறையில் சில பிரச்னையில் சிக்கியதால் தற்போது இந்த படத்தில் யோகி பாபு தான் நடித்து வருகிறார்.

இந்த படம் குறித்து ராகுல் தாத்தா பேசுகையில், இந்த படத்தில் யோகிபாபுவும் நானும்தான் படம் முழுக்க வருவோம். இரண்டு பேரும் விஜய் ரசிகர் மன்றத்துல இருக்கிறவங்க. நான்தான் மாவட்ட இளைஞரணித் தலைவர். விஜய் போட்ட காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு, விஜய் பேசின பன்ச் டயலாக் பேசிக்கிட்டு ஊருக்குள்ள அலப்பறை பண்ணிட்டு இருக்கிற மாதிரியான சூப்பர் கேரக்டர் . இதுல எனக்கு சாங், ஃபைட் எல்லாம் கூட இருக்கு. `நானும் ரெளடிதான்' படத்துக்குப் பிறகு, `பேய் மாமா' என்னை எல்லோர்கிட்டயும் கொண்டுபோய் சேர்க்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full