அம்மாவான 'நாதஸ்வரம்' சீரியல் நடிகை கீதாஞ்சலி, என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 11/12/2024

நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோவும், இயக்குனருமான திருமுருகனின் காதலி என்ற ரோலில் நடித்தார். இந்த முதல் சிரியலிலேயே இவருக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

நடிகை கீதாஞ்சலி காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். நாதஸ்வரம் சீரியல் ஷூட்டிங் காரைக்குடியைச் சுற்றி உள்ள இடங்களில் நடந்ததால் வீட்டிலிருந்தே வந்து சூட்டிங்கில் கலந்து கொண்டார் கீதாஞ்சலி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து இவருக்கு அடுத்து அடுத்து சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இதனால் இவர் சென்னையிலேயே தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து தங்கினார்.

கீதாஞ்சலி நடித்த சீரியல்கள்:

பின் கீதாஞ்சலி அவர்கள் சினிமாவில் கூட சில படங்களிலும் நடித்து வந்தார். மேலும், இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி இருந்த “வாணி ராணி”, ஜீ தமிழில் ஒளிபரப்பான “நிறம் மாறாத பூக்கள்”, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கீதாஞ்சலிக்கு அவ்வளவாக சினிமாக்களும், சீரியல் வாய்ப்புகள் அமையவில்லை என்ற உடன் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

கீதாஞ்சலி திருமணம்:

அதன் பின் இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. கீர்த்தி ராஜ் இன்ஜினீயரிங் முடித்து விட்டு துபாயில் பணியாற்றி வருகிறார். இது முழுக்க முழுக்க அரேஞ்ச் மேரேஜ். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

கீதாஞ்சலி கர்ப்பம்:

திருமணத்திற்கு பிறகும் இவருக்கு சில சீரியல் வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால், இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தன்னுடைய கணவருடன் துபாயில் செட்டில் ஆகிவிட்டார். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் கீதாஞ்சலி கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய பிரசவத்துக்காக காரைக்குடி வந்திருந்தார்.

கீதாஞ்சலி குழந்தை:

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இவருடைய குழந்தைக்கு பிரணவ்ரிதன் என்று பெயர் வைத்திருக்கிறார். இது முருக கடவுளுடைய பெயர். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கீதாஞ்சலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full