பிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். தனது பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்த நடிகை என்று பெயர் பெற்றவர்.

Advertisement

பெங்களூரில் வளர்ந்தாலும் இவரின் பூர்விக்கம் தமிழகம் தான். இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” என்ற படத்திலும் நடித்தார்.

அந்த படத்தில் “பா யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு” என்ற வசனத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த படத்திற்கு பின்னர்,”ரம்மி , புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

Advertisement

படங்களில் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரித்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிற இவரை தற்போது நீங்கள் பார்த்தாள் “பா யாருடா இந்த பொண்ணு” என்று தான் கேட்பீராகள். அந்த அளவிற்கு படு மாடர்ன் மங்கையாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “சீதகாதி ” படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement