சமந்தாவை மொத்தமாக வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்த நாக சைதன்யா - இது தான் அந்த கடைசி புகைப்படமா

By subhashini · 29/10/2024

சமந்தாவுடன் தொடர்பான புகைப்படங்களை நாக சைதன்யா செய்து டெலீட் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள்.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி இருந்தது. அதோடு இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம்:

சமீபத்தில் தான் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது. இது தொடர்பாக நாகார்ஜுனா பதிவு போட்டு இருந்தார். பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் நாக சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Sobhita (@sobhitad)

நாக சைதன்யா பதிவு:

சமீபத்தில் தான் திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கி இருக்கிறது. கூடிய விரைவில் திருமண தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாவில் இருந்து சமந்தா உடைய புகைப்படங்கள் எல்லாம் நடிகர் நாக சைதன்யா நீக்கி இருக்கிறார். அதாவது, இருவருக்கும் விவாகரத்து ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை மட்டும் நீக்காமல் நாக சைதன்யா வைத்திருந்தார்.

டெலீட் செய்த புகைப்படங்கள்:

விவாகரத்து குறித்த பதிவு, இருவரும் சேர்ந்து நடித்த மஞ்லி படத்தினுடைய போஸ்டர், ரேஸ் டிராக்கில் இருவருமே சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். இதை பார்த்து தான் சமந்தாவின் ரசிகர்கள் பதிவுகளை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். உடனே நாக சைதன்யாவும் சமந்தா சம்மந்தப்பட்ட எல்லா பதிவுகளையும் நீக்கி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full