சென்ற இடமெல்லாம் விவாகரத்து குறித்து பேசும் சமந்தா, மூன்று மாதம் கழித்து விவகாரத்துக்கான காரணத்தை சொன்ன நாக சைத்தன்யா.

By Rajkumar · 14/1/2022

சமந்தாவை பிரிந்த காரணம் குறித்தும் விவகாரத்து முடிவு குறித்தும் மூன்று மாதங்களுக்கு பின் மனம் திறந்து உள்ளார் சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைத்தன்யா. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

விவாகரத்து பற்றி தொடர்ந்து பேசி வரும் சமந்தா :

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். விவாகரத்துக்கு பின்னர் அடிக்கடி விவாகரத்து பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சமந்தா.

மன அழுத்தத்தில் இருந்து மீண்ட சமந்தா :

சமீபத்தில் சமந்தா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் கூறியது, உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போது தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மன நிலையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள் தான். அவர்கள் துணையில் தான் நான் அதிலிருந்து விடுபட்டேன்.

3 மாதம் கழித்து மனம் திறந்த சைத்தன்யா :

அதோடு நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறதுக்கும் அவர்கள் தான் காரணம் என்று பேசி இருந்தார். விவகாரத்து பின் சமந்தா தொடர்ந்து அதை பற்றி பேசி வந்தாலும் நாக சைத்னயா அது குறித்து பெரிதாக பேசியதும் இல்லை அது குறித்து பெரிதாக பதிவிட்டதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார் நாக சைத்தன்யா.

விவாகரத்து நல்ல முடிவு தான் :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பிரிந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இது போன்ற ஒரு சூழலில் விவாகரத்துதான் சிறந்த முடிவு தான் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full