திருமணத்திற்கு முன்பே நாக சைதன்யா போட்ட கண்டிஷன், அதையே பின்பற்றும் சோபிதா- என்ன தெரியுமா?

By krithika · 19/12/2024

திருமணத்திற்கு முன்பே சோபிதாவிடம் நாக சைதன்யா போட்ட கண்டிஷன்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் தொடர்பான செய்திகள் தான் சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான தம்பதியாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் :

இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=S1I-i_XFQzo&t=36s

நாக சைதன்யா- சோபிதா திருமணம் :

அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் நாலாம் தேதி இரவு 8: 13 மணிக்கு , நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது. குறிப்பாக இந்த திருமணம் நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் நடைபெற்றது. மேலும், இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

நாக சைதன்யா போட்ட கண்டிஷன்:

மேலும், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட கையோடு கோவில்களுக்கு சென்று வருகிறார்களாம். இவர்கள் குடும்பமாக கோவில்களுக்கு செல்லும் வீடியோக்கள் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு நாக சைதன்யா சோபிதாவுக்கு போட்ட கண்டிஷன் குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த கண்டிஷன் குறித்து சோபிதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், நாகர்ஜுனா குடும்பம் தெலுங்கு பாரம்பரியம் கொண்டது என்றாலும் அவர்களால் சரளமாக தெலுங்கில் அதிகம் பேச முடிவதில்லை'.

தெலுங்கில் தான் பேச வேண்டும்:

அதோடு நாக சைதன்யா தம்பி அகில் அமெரிக்காவில் வளர்ந்ததால் அவருக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் பேசுவார். அதனால் வீட்டில் அதிகமாக ஆங்கிலமே பேசப்படுகிறது. அதனால் சோபிதா தெலுங்கு நன்கு பேசுவார் என்பதால் திருமணத்திற்கு பின் வீட்டில் இருக்கும்போது தெலுங்கில் மட்டுமே பேச வேண்டும் என்று நாக சைதன்யா கண்டிஷன் போட்டு இருக்காராம். அவருடைய இந்த அன்பான கட்டளையை ஏற்று சோபிதா ஆங்கிலத்தை தவிர்த்து வீட்டில் தெலுங்கிலேயே பேசுகிறாராம். அதோட வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் தெலுங்கில் மட்டுமே பேசுவதாக கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full