நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு முன்பே விவாகரத்து ஒப்பந்தம் போடப்பட்டதா? - பின்னணி இதோ
நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் விவாகரத்து ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் தான் சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் :
இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.
நாக சைதன்யா- சோபிதா திருமணம் :
அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் நாலாம் தேதி இரவு 8: 13 மணிக்கு , நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது. குறிப்பாக இந்த திருமணம் நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் நடைபெற்றது. மேலும், இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
விவாகரத்து ஒப்பந்தம்:
மேலும், சைதன்யா- சோபிதாவின் திருமணத்தின் போது, நாகார்ஜுனா அவர்களுக்கு இடையேயான விவாகரத்து தொடர்பான ஒப்பந்தத்தை தயாரித்து அதில் கையெழுத்திட வைத்தார் என்றும். அந்த ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகள், விதிமுறைகள் உள்ளதாக செய்திகள் பரவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தச் செய்தியில் உண்மை தன்மை இல்லை. சமந்தா உடனான நாக சைதன்யாவின் விவாகரத்தை அடுத்து, நாக சைதன்யா விஷயத்தில் நாகர்ஜுனா சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நாக சைதன்யா குறித்து:
ஆனால், ஒப்பந்தங்கள் குறித்து பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று கூறப்படுகிறது. சமீப காலமாக சரியான ஹீட் இல்லாத நாக சைதன்யா, தற்போது 'தண்டேல்' படத்தில் கம் பேக் கொடுக்க உள்ளாராம். இந்தப் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதால், வருகின்ற 2025 ஆம் ஆண்டு அக்கினேனி ஹீரோக்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்த படம் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.