தடபுடலாக நடக்கும் நாக சைதன்யா-சோபிதா திருமண கொண்டாட்டம், வெளியான கல்யாண பத்திரிக்கை?

By ·

நாக சைதன்யா-சோபிதா திருமணம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

பின், நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா:

இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று என்ன விவரமும் தெரியவில்லை. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதோடு இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், திருமணத்திற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்பட்டது. நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்ள ஆரம்பத்து இருக்கிறார்கள். மேலும், இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

திருமணம் எப்போது:

உண்மையில் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூரணா ஸ்டுடியோவில் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது. மேலும், வருகின்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் என்றும், அதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதோட தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் நாகார்ஜுனா அதற்கான ஏற்பாடுகளை உற்சாகத்தோடு ஆரம்பித்திருக்கிறாராம்.

திருமண பத்திக்ரிகை:

இப்படி இருக்கும் நிலையில் நாக சைதன்யா- சோபிதாவின் திருமண பத்திரிக்கை தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவின் தென் மாநிலங்களின் பாரம்பரியங்கள் இடம் பெற்றிருக்கின்றது. அந்த பத்திரிகையில் ஒரு கோயில், விளக்குகள், மாடுகள், மணிகள் போன்றவை எல்லாம் இருக்கின்றது. மணமகன் மற்றும் மணமகளின் பெயர்களுடன் அவர்களின் குடும்ப விவரங்களும் இருக்கிறது. மேலும், இந்த திருமண பத்திரிக்கையுடன் ஒரு பரிசு கூடையும் விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது நாகசைதன்யா குடும்பத்தினர் கொடுக்கும் பத்திரிக்கையா? இல்ல ரசிகர்களால் உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை