நயன்தாரா வழியில் நாக சைதன்யா : திருமண ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் - இத்தன கோடிக்கு விற்கப்பட்டதா?

By subhashini · 26/11/2024

நாக சைதன்யா-சோபிதா திருமணம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா:

இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்ற விவரமும் தெரியவில்லை. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. பின் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள். நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்ள ஆரம்பத்து இருக்கிறார்கள். மேலும், இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூரணா ஸ்டுடியோவில் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், வருகின்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

திருமணம் குறித்த அப்டேட்:

நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததால் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த நாகர்ஜுனா திட்டமிட்டு இருக்கிறார். தற்போது திருமணத்திற்கான வேலைபாடுகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நாக சைதன்யாவின் திருமண குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் ஒளிபரப்பு உரிமை:

அதாவது, நாக சைதன்யா- சோபிதாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதுவும் 50 கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுடைய திருமணத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இதற்கு முன்பு விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தின் உரிமையையும் netflix நிறுவனம் 25 கோடி கொடுத்து வாங்கி இருந்தார்கள். ஆவணப்படமாக சமீபத்தில் தான் வெளியிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full