விவாகரத்து பின் சமந்தா கொண்டாடிய முதல் பிறந்தநாள் - முன்னாள் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.

By Arun · 29/4/2022

சமந்தாவின் பிறந்தநாளுக்கு நாகசைதன்யா கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சமந்தா படங்களில் நடித்து வந்தார். அதோடு இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இருந்தும் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதிலும் பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

நேற்று சமந்தா நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகி இருக்கிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

சமந்தா பிறந்தநாள்:

அதுமட்டும் இல்லாமல் நேற்று சமந்தாவின் பிறந்தநாள். அதே நாளில் அவர் நடித்த காத்துவாக்குல 2 காதல் படமும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாகசைதன்யா சமந்தாவின் பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அது என்னவென்றால், நாக சைதன்யா நடித்து இருக்கும்வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பை தான் நேற்று அறிவித்து இருக்கிறார். அமேசான் பிரைமின் 'இந்தியா' என்ற நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தான் நாகசைதன்யா தான் நடிக்கும் வெப் சீரிஸ்ஸை லான்ச் செய்திருந்தார்.

நாக சைதன்யா வெப்சீரிஸ் பற்றிய தகவல்:

இந்த திகில் கதையம்சம் நிறைந்த சூப்பர் நேச்சுரல் வெப்சீரிஸ் பெயர் 'தூதா'. இதில் நாகசைதன்யா மற்றும் மலையாள நடிகை பார்வதி திருவொத்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம்.கே.குமார் இயக்கத்தில் இந்த வெப்சீரிஸ் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த வெப்சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் இந்த வெப்சீரிஸ்ஸை சமந்தா பிறந்த நாள் அன்று வெளியானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full