அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது - நாக சைதன்யா பதிலால் கொந்தளித்த சமந்தா ரசிகர்கள்
தன்னுடைய மனைவி பற்றி நாக சைதன்யா சொல்லி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த தண்டேல் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடியாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
நாக சைதன்யா- சமந்தா:
இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவை காதலித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்:
இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு சோபிதா- நாக சைதன்யா இருவருமே வெளிநாடு பயணங்களுக்கு சென்றிருந்தார்கள். அங்கு எடுத்த புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்கள்.
நாக சைதன்யா சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் யார் இல்லாமல் உங்களால் இருக்க முடியாது? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நாக சைதன்யா, என்னுடைய மனைவி சோபிதா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அவர்தான் என்னுடைய பலம். எங்களுடைய காதல் இன்ஸ்டாகிராமில் தான் தொடங்கியது. அதற்குப் பிறகுதான் நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்தது சமந்தா ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளித்திருக்கிறது