சென்ட்டிமென்ட் இடம், ஓடிடி ஒப்பந்தம், - திருமணம் குறித்த ரகசியத்தை போட்டு உடைத்த நாக சைதன்யா

By subhashini · 29/11/2024

தன்னுடைய திருமணம் குறித்து நாக சைதன்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா:

இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள்.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

மேலும், இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூரணா ஸ்டுடியோவில் நடப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததால் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த நாகர்ஜுனா திட்டமிட்டு இருக்கிறார். தற்போது திருமணத்திற்கான வேலைபாடுகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திருமணம் குறித்த அப்டேட்:

அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு நாக சைதன்யா- சோபிதாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதுவும் 50 கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய திருமணம் தொடர்பாக அளித்த பேட்டியில் நாக சைதன்யா, திருமணம் நடக்க இருக்கும் இடம் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

நாக சைதன்யா பேட்டி:

திருமணம் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்கிறது. அது எங்களுடைய குடும்பத்துக்கு ரொம்ப சென்டிமென்ட் ஆன இடம். அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது. பெரிய அளவில் சடங்கு முறைகள் எல்லாம் பின்பற்றி திருமணம் நடைபெற இருக்கிறது. சோபிதாவின் குடும்பத்தினர் ரொம்ப அன்பானவர்கள். என்னை அவர்கள் வீட்டு மகனாகவே பார்க்கிறார்கள். இனிவரும் நாட்களில் எங்களுடைய பந்தம் இன்னும் வலுமையாகும். திருமணத்திற்கு பிறகும் சோபிதா படங்களில் தொடர்ந்து நடிப்பார். திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது எல்லாம் உண்மை கிடையாது. அந்த மாதிரி எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full