காதலியை நடு ரோட்டில் அறைந்த இளைஞர், தட்டி கேட்டு இளம் நடிகர் செய்த செயல். குவியும் பாராட்டு.

By Manikandan · 2/3/2023

பொது வெளியில் தன்னுடைய காதலியை கன்னத்தில் அறைந்த இளைஞருக்கு பிரபல தெலுங்கு நடிகர் அங்கேயே தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து மன்னிப்பு கேட்க சொன்ன வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக இருவர் நாக சௌர்யா. இவர் ஓஹலு குசகுசலாடே, திக்குலு சூடகு ராமையா, கல்யாண வைபோகமே, மற்றும் ஜ்யோ அச்யுதானந்தா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான தியா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தினை லைகா ப்ரொடெக்ஷன் தயாரிக்க ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை சாய்பல்லவி நடித்திருந்தார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பல தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நாக சௌர்யா சமீபத்தில் தான் அனுஷ்கா ஷெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான் சாலையில் ஒருவர் தன்னுடைய காதலி காதலிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை கணத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இதனை பார்த்து அங்கு சென்ற பொது மக்கள் யாரும் அந்த இளைஞரை தட்டி கேட்கவில்லை. ஆனால், இதனை பார்த்த நடிகர் நாக சௌர்யா உடனடியாக வந்து கன்னத்தில் அறைந்த நபரை அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த நபர் இது என்னுடைய காதலி என்று கூறி மறுத்த போது நடிகர் நாக சௌர்யாவும் விடாபிடியாக அவரின் கைகளை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக நின்று விட்டார்.இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல மீடியாவில் வெளியாகி நாக சௌர்யாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ரோட்டில் போகும் சக மனிதர் கூட இதனை தட்டி கேட்காத போது ஒரு நடிகராக இருந்து இதனை தட்டி கேட்டு இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த நவம்பரில், நாக சௌர்யா படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான நீரிழப்பு காரணமாக இது நடந்தது.இந்த சம்பவம் அவரது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்தது, ஆனால் அவர் விரைவாக படப்பிடிப்புக்கு திரும்பினார்.பின்னடைவு இருந்தாலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக நாக சௌர்யா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full