அன்புள்ள சோபிதா, ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் - மருமகள் பற்றி நாகார்ஜுனா எமோஷனல் பதிவு

By subhashini · 5/12/2024

தன்னுடைய மகன் மற்றும் மருமகளை வாழ்த்தி நாகர்ஜூனா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். மேலும், நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து இருந்தார்கள்.

இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் :

அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள். பின் நாக சைதன்யா - சோபிதா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதுவும் 50 கோடி கொடுத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் நாக சைதன்யா கூறி இருந்தார்.

நாக சைதன்யா- சோபிதா திருமணம் :

மேலும், நேற்று நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இரவு 8: 13 மணிக்கு நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றது. குறிப்பாக, இந்த திருமணம் நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

நாகர்ஜுனா வழங்கிய பரிசு:

அதோடு இவர்களின் திருமணத்திற்கு நாகார்ஜுனா ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள சொகுசு கார், இருவரும் வசிக்கும் விதமாக ஹைதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்றையும் பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியா முழுவதும் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்ஜுனா தன்னுடைய மகன் மற்றும் மருமகளின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து பதிவு போட்டிருக்கிறார்.

நாகர்ஜுனா பதிவு:

அதில் அவர், இந்த அழகான அத்தியாயத்தை சோபிதா- நாக சைதன்யாவும் ஒன்றாக தொடங்குவதை பார்ப்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கிறது. என்னுடைய அன்பான சைதன்யா, சோபிதாவிற்கு வாழ்த்துக்கள். ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியை கொண்டு வந்து விட்டீர்கள். ANR-ன் (நாகார்ஜுனாவின் தந்தை) நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட அவருடைய சிலையின் கீழ் திருமணம் நடந்தது இது இன்னும் ஆழமான அர்த்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் உங்களுடைய பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் இருப்பது போல உணர்கிறேன். எங்கள் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full